சென்ற வலைப்பூவில் 100 ஐ விட குறைவான எண்களின் வர்க்கத்தை எளிமையாக எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கண்டோம். இன்று 100 ஐ விட அதிகமான எண்களின் வர்க்கங்களை பேனா, பென்சில், கால்குலேட்டர் இல்லாமல் எவ்வாறு கண்டுபிடிப்பது?... வாருங்கள்....
1) முதலில் 104 என்பது 100ல் இருந்து எவ்வளவு அதிகமாக உள்ளது என கண்டுபிடிக்க வேண்டும். ( அதாவது 104 என்பது 100ல் இருந்து 4 அதிகமாக உள்ளது )
2) அடுத்து 104 உடன் இந்த 4 ஐக் கூட்ட வேண்டும். ( 104 + 4 = 108 )
3) பிறகு கூட்டி வந்த எண்ணுக்குப் பிறகு இரண்டு இலக்கங்களைச் சேர்க்க வேண்டும் (அதாவது 100ல் இரண்டு பூஜ்ஜிங்கள் உள்ளது. எனவே இரண்டு இலக்கங்களைச் சேர்க்க வேண்டும்)
4) அந்த இரண்டு எண்களைக் கண்டுபிடிக்க... முதல் படியில் கண்டுபிடித்தோம் அல்லவா... அதாவது 100ல் இருந்து எவ்வளவு அதிகம் என்று... அதன் வர்க்கம் காணவேண்டும். ( அதாவது 104 என்பது 100ல் இருந்து 4 அதிகமாக உள்ளது. அந்த 4ன் வர்க்கம் காணவேண்டும். அதாவது 4x4 = 16)
5) இப்போது நாம் முதலில் கண்டுபிடித்த (இரண்டாவது படியில்) 108க்குப் பிறகு இந்த 16ஐ சேர்க்கவேண்டும் (10816). 104ன் வர்க்கம் 10816.
அவ்வளவுதான்.......
102² = 10404
103² = 10609
104² = 10816
105² = 11025
106² = 11236
107² = 11449
108² = 11664
109² = 11881
சோதித்துப் பாருங்களேன்... சரியாக இருக்கும்...
மறக்காமல் உங்களுடைய விமர்சனங்களை எழுதுங்கள். அது வலைப்பூவை மேம்படுத்த உதவும்.
மீண்டும் அடுத்த வலைப்பூவில் சந்திப்போம்.
இப்போது வர்க்கம் என்றால் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை காண்போம். வர்க்கம் என்றால் ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்குவது ஆகும். உதாரணமாக 4
என்ற எண்ணின் வர்க்கம் 4x4 =16, 5 என்ற எண்ணின் வர்க்கம் 5x5=25, 6 என்ற
எண்ணின் வர்க்கம் 6x6=36.....
104, 105, 106 போன்ற எண்களுக்கு வர்க்கமூலம் கண்டுபிடிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
104ன் வர்க்கம் கண்டுபிடிப்பது எப்படி?1) முதலில் 104 என்பது 100ல் இருந்து எவ்வளவு அதிகமாக உள்ளது என கண்டுபிடிக்க வேண்டும். ( அதாவது 104 என்பது 100ல் இருந்து 4 அதிகமாக உள்ளது )
2) அடுத்து 104 உடன் இந்த 4 ஐக் கூட்ட வேண்டும். ( 104 + 4 = 108 )
3) பிறகு கூட்டி வந்த எண்ணுக்குப் பிறகு இரண்டு இலக்கங்களைச் சேர்க்க வேண்டும் (அதாவது 100ல் இரண்டு பூஜ்ஜிங்கள் உள்ளது. எனவே இரண்டு இலக்கங்களைச் சேர்க்க வேண்டும்)
4) அந்த இரண்டு எண்களைக் கண்டுபிடிக்க... முதல் படியில் கண்டுபிடித்தோம் அல்லவா... அதாவது 100ல் இருந்து எவ்வளவு அதிகம் என்று... அதன் வர்க்கம் காணவேண்டும். ( அதாவது 104 என்பது 100ல் இருந்து 4 அதிகமாக உள்ளது. அந்த 4ன் வர்க்கம் காணவேண்டும். அதாவது 4x4 = 16)
5) இப்போது நாம் முதலில் கண்டுபிடித்த (இரண்டாவது படியில்) 108க்குப் பிறகு இந்த 16ஐ சேர்க்கவேண்டும் (10816). 104ன் வர்க்கம் 10816.
அவ்வளவுதான்.......
102² = 10404
103² = 10609
104² = 10816
105² = 11025
106² = 11236
107² = 11449
108² = 11664
109² = 11881
சோதித்துப் பாருங்களேன்... சரியாக இருக்கும்...
மறக்காமல் உங்களுடைய விமர்சனங்களை எழுதுங்கள். அது வலைப்பூவை மேம்படுத்த உதவும்.
மீண்டும் அடுத்த வலைப்பூவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment